சாதிப்பவன் சோர்ந்து விடமாட்டான்


வகுப்பு முடிய சற்று நேரம் இருந்தது.  

'உலகின் சிறந்த கணித மேதைகளால் தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை கரும்பலகையில் எழுதியுள்ளேன். இந்தக் கணக்குகள் இரண்டும் இன்றும் தீர்க்க முடியாத புரியாத புதிராகவே உள்ளது'  என்றார், ஆசிரியர்.

ஆசிரியர் எழுதும்போது அந்த மாணவன் வகுப்பில் இருக்கவில்லை. சற்று தாமதமாய் அந்த மாணவன் வகுப்பிற்கு வந்தான். அதற்குள் வகுப்பு முடிந்து விட்டது.

அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள் என்று நினைத்து, குறித்துக்கொண்டு போனான். அந்த மாணவன்.

மறுநாள் வகுப்பிற்கு விடையுடன் வந்தான் அவன்.

ஆசிரியர் உட்பட பாடசாலையே திகைத்து நின்றது.

அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்றான் அவன்.

அந்த மாணவன்தான் 'ஜோர்ஜ் பேர்நாட் டாந்த்ஸிக்.'

அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,

'அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது. எனவே, என்னால் முடிந்தது.'

கணிதம், கணனி விஞ்ஞானம், பொருளியல், புள்ளிவிபரவியல் முதலிய துறைகளில் பல சாதனைகளைச் செய்த இந்த அமெரிக்க மேதை தனது 90 ஆவது வயதில் 2005.05.13 அன்று காலமானார்.


Source: Click Here

No comments:

Post a Comment