எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்....!!!
ஆண் என்பவன் யார்…?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக
அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய
வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக
தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப
நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும்
குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட
நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம்
செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில்
கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான்
ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச்
செலுத்த தன் வாழ்நாள் முழுதும்
கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன்
மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித
குறையும் சொல்லாமல் தன்
இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய்,
மனைவி, தன் முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும்
அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம்
அவன் வாழ்க்கை முடிகிறது.