மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்போதுமே இளமையாக இருக்கலாம். அதெப்படி பிரச்சினைகள் வரும் போது மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்கலாம்....!!!
முடியும். எதையும் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் எந்த சூழ்நிலையிலும் உடைந்து போகாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ஒரு நகைச்சுவை இருக்கிறது. அதாவது நீங்கள் வாழ்க்கையில் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாவற்றிற்குமே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன.
வாழ்க்கையில் ஒன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் அல்லது நோய்வாய்ப்படுவீர்கள்.
முதலில் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
இல்லை,
உடல் நலக் குறைவு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கும் இரண்டு வாய்ப்புகள்தான்.
ஒன்று நீங்கள் குணமடைவீர்கள். இல்லையென்றால் இறந்துவிடுவீர்கள்.
நீங்கள் குணமடைவீர்கள் என்றால் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
இல்லை இறந்து விட்டால்
ஒன்று நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள் இல்லை நரகத்திற்கு செல்வீர்கள்.
சொர்க்கத்திற்குச் சென்றால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா என்ன?
இல்லை நரகத்திற்குச் செல்வீர்கள் என்றால்...
அங்குதான் உங்களது ஏராளமான நண்பர்கள் இருப்பார்களே.. அவர்களுடன் அரட்டை அடித்தே காலத்தை கழிக்கலாமே பிறகு ஏன் கவலைப்பட வேண்டும்.. இதுதான் அந்த நகைச்சுவை.
ஆனால் இது நகைச்சுவை மட்டுமல்ல.. வாழ்க்கையின் சுவையை அறியும் வழியும் கூட..
எதிலும் ஒன்று நல்லது அல்லது கெட்டது நடக்கும். நல்லது நடந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை, கெட்டது நடந்தால் அதிலும் இரண்டு விஷயங்கள். இப்படி இருக்க, உங்கள் வாழ்க்கைப் பற்றிய கவலையை தூக்கி எறிந்து விட்டு, வாழ்க்கை என்பது பூங்காவனம் அல்ல போராட்டக்களம் என்பதை உணருங்கள்.
போராட்டக்களத்தில் இழப்புகளும், வெற்றிகளும் சாதாரணம். எதற்கும் கலங்காமல் வாழ பழகிக் கொள்ளுங்கள். எப்போதும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று அதன் போக்கில் உங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறானப் பாதையில் பயணிக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் பாதையை மாற்றுங்கள். சில சமயங்களில் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை அளிக்கும்.
புதிதாக செய்யும் போதுதான் உற்சாகம் அதிகரிக்கும். அரைத்த மாவையே அரைத்து நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்.
உற்சாகம் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதை வெளியில் தேடாதீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள்.
Source: Click Here.
No comments:
Post a Comment